For a better experience please change your browser to CHROME, FIREFOX, OPERA or Internet Explorer.

About Chinnamanur.in and Dot NET Webs

சின்னமனூர் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும் நகரம். வரலாற்று சிறப்புமிக்க நமது ஊரில் விவசாயமும், வியாபாரமும் சிறந்து விளங்குகின்றன. நம்முடைய நகரை சுற்றி விளையும் அனைத்து பொருட்களும் நம்முடைய சந்தைக்கு வந்து விற்பனையாகின்றன. இது உள்ளூர் மக்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டன்சத்திரம், மதுரை, பெங்களூர் மற்றும் கேரளா போன்ற இடங்களுக்கு அனுப்பபடுகின்றன. அதேபோல் நம்ம ஊர் சந்தையில் கிடைக்காத பொருட்களே இல்லை என்பது போல் அனைத்து விதமான பொருட்களும் கிடைகின்றன. பெரிய நகரங்களுக்கும், பெரிய கடைகளுக்கும் சற்றும் குறையாமல் நம்ம ஊரில் ஜவுளி கடைகளும், நகைக்கடைகளும் அமைந்துள்ளன. பெரிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமே இல்லாமல் அனைத்து பொருட்களும் நமது ஊரிலேயே கிடைகின்றன.

ஆனால் நாம் ஒரு பொருளை வாங்க நினைக்கும் பொது அவை எந்த கடையில் கிடைக்கும் ?எங்கு கிடைக்கும் ?என்ன விலை இருக்கும் ? நம்ம ஊரில் இந்த பொருள் கிடைக்குமா ? என தெரியாமல் பெரிய நகரங்களுக்கு சென்று அதிகம் விலை கொடுத்தோ அல்லது அதிக செலவு செய்தோ அவற்றை வாங்கி வருகிறோம். ஆனால் அதே பொருள் நமது ஊரில் நமது அருகில் குறைந்த விலையில் கிடைக்கும் என நாம் அறியும் போது நாம் அடையும் வேதனை சொல்லிமாளாது.

அதற்க்கு ஒரு தீர்வாகதான் இந்த வெப்சைட் இங்கு கடைகாரர்கள், வர்த்தகர்கள், வாடிக்கையாளர்கள், நிறுவனங்கள்,தனி நபர்கள், சேவை வழங்குபவர்கள், சேவை பெறுபவர்கள் என அனைவரும் பயன்பெறலாம். ஆம் இங்கு தங்களிடம் என்ன பொருட்கள் உள்ளது என அவற்றின் விபரங்களையும் பதிவு செய்யலாம், தனக்கு என்ன பொருள் வேண்டும் எனவும் பதிவு செய்யலாம், ஆட்கள் வேலைக்கு தேவை எனவும் பதிவிடலாம், எனக்கு வேலை வேண்டும் எனவும் பதிவிடலாம், எங்கள் டிவியை சர்வீஸ் செய்ய ஆள் வேண்டும் எனவும் கோரலாம், நான் கொத்தனார் வேலை செய்கிறேன் உங்கள் வீட்டில் மராமத்து வேலைகள் இருந்தால் சொல்லுங்கள் செய்கிறேன் எனவும் பதிவிடலாம்.

இந்த வெப்சைட் பொருட்கள் வைத்திருபோரையும், பொருட்கள் தேவைபடுவோரையும், சேவை வழங்குபவரையும், சேவை தேவைபடுவோரையும் இணைக்கும் பாலமாக இயங்கும்.

சின்னமனூர் மக்கள் அனைவரும் இந்த வெப்சைட் பயன்படுத்தி நிறை குறைகளை எங்களுக்கு தெரிய படுத்துங்கள்.

உபயோகிப்பது மிகவும் எளிது மொபைல் ஆப் ஆகவும் கிடைக்கும், வெப்சைடிலும் பயன்படுத்தலாம்.

இந்த வெப்சைட் டாட்நெட் வெப்ஸ் என்ற எங்கள் நிறுவனத்தால் உருவாக்கி நிருவகிக்கபடுகிறது. எங்கள் நிறுவனம் (கம்ப்யூட்டர் வேல்டு - டாட்நெட் வெப்ஸ் ) கடந்த பதினெட்டு வருடங்களுக்கும் மேலாக கணினி துறையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மற்ற ஊர்களில் நிறைய நிறுவனங்களுக்கு சேவை செய்திருந்தாலும் நம்மூருக்கு என்று ஒரு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை கருத்தில் கொண்டு உருவாக்கபட்டதே இந்த வெப்சைட். மேலும் சின்னமனூர் நகர் செய்திகளுக்கு என்று ஒரு தனி இணையதளம் அமைக்கும் முயற்சியிலும் உள்ளோம். உங்களின் மேலான ஆதரவால் நங்கள் மேலும் மேலும் வளர வாழ்த்துங்கள். நன்றி

பதிவு இலவசம்

இந்த வெப்சைட்டில் பதிவு இலவசம், அதில் சிறப்பு அம்சங்கள், முன்னுரிமை அல்லது அதிகமான பதிவுகள் வேண்டும் என்றால்தான் அதற்கான தொகுப்புகளை வாங்க வேண்டும்.

எங்களின் நோக்கம்

நமது ஊரின் சிறப்பை அனைவரும் அறியும்படி செய்யவும், நமது ஊரின் வர்த்தகத்தை சுலபமாகவும், சிறப்பாகவும் செய்திடவும் எங்களால் முடிந்த அளவு சிறப்பாக செயல்படுவதே எங்கள் நோக்கம்.

இணையமே எதிர்காலம்

இனிமேல் நமது சந்ததியினர் அனைத்தையும் ஆன்லைனிலேயே பெற விரும்புகின்றனர், பெற இருக்கின்றனர் நாமும் அதற்க்கு ஏற்றார் போல் இப்போதே ஆயத்தமாக வேண்டும். அதற்கான ஒரு சிறு முயற்சியே இது.

உங்களுக்கு தேவைப்படும் சிறப்பு பதிவுகளுக்கு தேவையான தொகுப்பை தேர்வு செய்யவும்

இங்கு பதிவு இலவசமே, உங்களுக்கு அதிக பதிவுகள், சிறப்பு பதிவுகள் தேவை என்றால் அதற்க்கான விலை தொகுப்புகள் கீழே கொடுக்கபட்டுள்ளன. இவற்றை கூடுதலாக பெற்று பயன்பெறலாம்.

Individual

299.00
  • Validity: 90 Days
  • Ads: 30
  • Featured Ads: 10
  • Bump-up Ads: 30
Select Plan

Premium

999.00
  • Validity: 90 Days
  • Ads: 200
  • Featured Ads: 100
  • Bump-up Ads: 200
Select Plan
Top Android
Android
Positive SSL